ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது! பொன்முடியின் தண்டனையை வரவேற்ற குஷ்பு!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது.
அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி ..!
அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனையை வரவேற்கும் வகையில் நடிகை குஷ்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் குஷ்பு கூறியதாவது ” ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது, வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
திமுக அமைச்சர் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன் . நமது நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை இப்போது வலுவாக உள்ளது” என கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025