பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு- குஷ்பு..!
மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு, நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன் என குஷ்பு தெரிவித்தார்.
காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு கட்சியில் இருக்கும் வரை அவர்களுக்கு சாதகமாக பேசுவது கடமை எனவும், மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு, நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் பாஜக மீது கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம். பிரதமர் மோடி போன்ற தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என கூறினார்.