பப்ஜி மதன் மீதான குண்டாசை உறுதி செய்தது அறிவுரை கழகம்.
யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மாசில்லாமணி, ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டார். அவருடன் அவரது மனைவியான கிருத்திகாவும், கைக்குழந்தையுடன் ஆஜரானார்.
அப்போது பப்ஜி மதன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு நான் எந்தவித தவறும் செய்யவில்லை என்றும், எனவே தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார். இந்நிலையில், இன்று பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்துள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…