#BREAKING: ரவுடி மீது குண்டாஸ்.., அரசு பதிலளிக்க உத்தரவு..!
பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து மணியின் தந்தை மனு தாக்கல்.
புதுப்பாக்கம் வீட்டில் போலீசார் அத்துமீறி நுழைந்து சி.டி மணியை துப்பாக்கிமுனையில் கைது செய்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரூர் பாலத்தில் ரவுடி சி.டி மணி கைது செய்ததாக கதை ஜோடித்துள்ளதாக தந்தை பார்த்தசாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், ரவுடி சி.டி மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, போலீசார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.