விரைவில் தனி மாவட்டமாக கும்பகோணம் – அமைச்சர் உதயகுமார்!
தமிழகத்தில் மொத்தமாக 32 மாவட்டங்கள் இருந்தது.சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டமாக மாற்றப்பட்டதால் 33 மாவட்டங்களாக இருந்தது.இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவைவிதி 110 கீழ் திருநெல்வேலியில் இருந்தது தென்காசியும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக இன்று அறிவித்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 35 மாவட்டங்களாக மாறியுள்ளது.இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டு ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் , செங்கல்பட்டு போலவே கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை மற்ற கோரிக்கை உள்ளதால் விரைவில் தனி மாவட்டமாக அரசு அறிவிக்கும் என சட்டப் பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.