கும்பகோணம்:மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக கே.சரவணன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி,மற்றும் பேரூராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி பொறுப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில்,திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கு 2 துணை மேயர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர், 8 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 11 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் கே.சரவணன் என்பவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…