திருவிழாவான மதுரை..! கள்ளழகர் கோயிலுக்கு பக்தர்கள் புடைசூழ மகாகும்பாபிஷேக விழா.!
மதுரையில் உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா என்பது உலகளவில் புகழ்பெற்ற ஆன்மீக நிகழ்வாகும். சித்திரை திருவிழா நடைபெறும் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இன்று தான் மதுரை அழகர் கோயில், கள்ளழகர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த விழா நேற்று 8 யாக குண்டலங்கள் வளர்க்கப்பட்டு இன்று ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேம் நடைபெற்றது.
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!
2 கோடி ரூபாய் செலவீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட ராஜகோபுரதிற்கு தற்போது மகா கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் கொண்டு ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் தீர்த்த நீர் , ஹெலிகாப்டர் உதவியுடன் பக்தர்கள் மீதும், ராஜ கோபுரம் மீதும் தெளிக்கப்பட்டது. மேலும், 15 இடங்களில் தீர்த்தங்களை பக்தர்கள் மீது தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.