3 நாளில் ரூ.7,000,000 மீன் வர்த்தகம் பாதிப்பு.!பெரும் இழப்பை சந்தித்த குமரி மீனவர்கள்!!
நாகர்கோவில் விற்பனை ஆகாமல் துறைமுகங்களில் மீன்கள் தேக்கம் அடைந்துள்ளதால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.7கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளன.இதற்கெல்லாம் காரணம் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தான் வேற யாரும் இல்லை,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன.
கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக முடங்கியுள்ளதால் எப்படியும் வருகின்ற 31-ம் தேதி வரை இது நிகழும் என்று தெரிந்ததே, இதனால் மீன்கள் விற்பனை ஆகாமல் தேக்கிவைப்பட்டுள்ளதால் பெரு நஷ்டம் அடைந்தோம் என்று குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 7 கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.