#2வது ராக்கெட்ஏவுதளம்-குலசேகரன்பட்டினம்!பணிகள் விறுவிறு..ஜிதேந்திரசிங் தகவல்
இரண்டாவது பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியானது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர் மக்களவையில் ஜிதேந்திரசிங் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் கூறியதாவது:
இந்தியாவின் இரண்டாவது பிரம்மாண்ட ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியானது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர் மக்களவையில் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.
விண்வெளித் துறையின் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 962 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு இதற்காக அடையாளம் கண்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இவற்றில், 432 ஹெக்டேருக்கு நில கணக்கெடுப்பு பணியானது முடிக்கப்பட்டு பூர்வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் மேலும் ஏவுதளம் அமைக்கும் பணியானது விரைந்து நடைபெற்று வருவதாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.