தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினார் ஆட்சியர் சந்திப் நந்தூரி…!!!
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் சந்திப் கந்தூரி பள்ளி மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு கந்தூரி கலந்து கொண்டு, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கியுள்ளார்.
மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மாற்றாக உலோகத்தால் ஆன குடிநீர் பாட்டில்களையும் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆட்சியர் விழிப்புணர்வு பேரணியையும் துவக்கி வைத்துள்ளார்.