தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் முறையிட்டார். அதில் தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் நடத்த உள்ளனர்.புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை .எனவே குடமுழுக்கு நடத்த தடை விதிக்கவேண்டும் என அந்த முறையீட்டில் கூறியிருந்தார்.பின்னர் நீதிபதி வழக்கறிஞர் சரவணன் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று விசாரிப்பதாக கூறினார்.
இதனையடுத்து இன்று வழக்கறிஞர் சரவணன் தனது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ததால் அவர் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில், தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குடமுழுக்கு என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை நாளை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை நாளை ஒத்திவைத்தது. குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் மனுதாக்கல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…