வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறேன் – கமலஹாசன்

Default Image

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களைப் பாராட்டுகிறேன் கமலஹாசன் ட்வீட். 

2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் ட்வீட்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.’ என் பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்