‘ஆன்-லைன்’ சூதாட்டத்திற்குத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டமல்ல – உயிர்களை – இளைஞர்களைக் காக்கும் இன்றியமையாத சட்டமாகும் என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்.
கடந்த சட்ட பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் மசோதா இயற்றப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் ஜூன் மாதம் சமர்ப்பித்தது.
கடந்த செப்.26-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து, வரும் 17-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘ஆன்-லைன்’ சூதாட்டத்திற்குத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டமல்ல – உயிர்களை – இளைஞர்களைக் காக்கும் இன்றியமையாத சட்டமாகும்! மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உடன்பட்டால்- சமூகப் பாதுகாப்பு – நலன்- பெரும் பயனை விளைவிக்கும். முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் பாராட்டு!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…