கூடங்குளம் அணு ஆலை பாதியளவு கூட இயங்கவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணு உலை இயங்கி வருகிறது. இந்த அணு உலை இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கூறி, பல போராட்டங்கள் நடைடப்பெற்றன. இதனால் பல நாட்கள் அணு உலை இயங்காமல் இருந்து வந்துள்ளது.
மேலும், சில தொழில்நுட்ப காரணங்களால் ஆலை சரிவர இயங்கவில்லை எனவும் . இதனால் ஒரே ஒரு அணு உலை மட்டுமே இயங்கிவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களை உலக அளவில் உள்ள அணு உலை, மற்றும் அணு உற்பத்தி தொடர்பாக உள்ள ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வரும் உலக அணுசக்தி தொழில் அமைப்பு, இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், கூடங்குளத்தில் இயங்கும் அணு ஆலையில் சில காரணங்களால் சரிவர இயங்கவில்லை. 50 சதவீதத்திற்க்கு குறைவாகவே இந்த ஆலை செயல்பட்டது. இந்த ஆலையில் மாற்று சக்தி கொண்டு மின்சாரம் தயாரிக்கவும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025