தலைவரை மாற்ற வேண்டாம்.. காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை வலியுறுத்தும் தமிழக நிர்வாகிகள்.!
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பில் கே.எஸ்.அழகிரி இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தன என தகவல் வெளியாகியது.
இதனால் மாநில தலைவர் பதவி எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படடலாம் என்ற நிலையில் இருந்த போது, தற்போது வெளியான தகவலின் படி, மாநில தலைவராக கே.எஸ்.அழகிரி தொடர வேண்டும் என்றும் இன்னும் 6 மாதித்தில் தேர்தல் வர உள்ளதால், தற்போது தலைவரை மாற்றுவது சரியாக இருக்காது எனவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக நிர்வாகிகள், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 6 மாதத்தில் நடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது என்றும், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு கே.எஸ்.அழகிரியே தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.