நடிகையாகவே காங்.,பார்த்தது! கே-எஸ் அழகிரி பளீச்
நடிகை குஷ்பு பாஜகவுக்கு செல்வதால் காங்., கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தமிழக காங்.,தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகையும் காங்.,தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அடுத்தடுத்து வெளியான தகவலையடுத்து, காங்., கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டார்.இந்நிலையில் நீக்கப்பட்ட சில நிமிடங்களில் நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.
அக்கடித்தத்தில் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.மேலும் காங்., தான் புறக்கணிக்கப்படுவதாக அதில் கூறிப்பிட்டிருந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து கூறியதாவது, பாஜகவில் நடிகை குஷ்பு இணைவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. அவரை நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தார்களே தவிர தலைவராக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.