கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது – தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்!
கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் உள்ள ஒரு சூளையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இவர் அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அண்மையில் கே எஸ் அழகிரி அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் அதிமுக-பாஜகவை கூட்டணி சேர்த்து பேசியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய எல்.முருகன், கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது என கூறியுள்ளார். தமிகத்திற்கான அதிமுக-பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.