ஓலா நிறுவனம் சார்பில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் சார்பில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது. ஓலா நிறுவனம் அமைக்கவுள்ள ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஓலா நிறுவனம் அமைக்கும் ஆலையில் 2 விநாடிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்படும். ஆலையில் வாகன உற்பத்தி பணிகளுக்காக 3,000 ரோபோக்கள் பணியில் ஈடுப்பட உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுப்படுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனத்திற்கு 2030 வரை மாநில ஜி.எஸ்.டி 100% திரும்ப வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது 100% முத்திரைதாள் கட்டண விலக்கு என தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…