பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது அறிவிப்பு..!!

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது.அதாவது,கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும்,மேலும்,விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில்,பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கி.ரா. விருதை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது.இந்த விருது செப்.19 ஆம் தேதியன்று நடைபெறும் விழாவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்களின் பேரன்தான் எழுத்தாளர் கோணங்கி.இவரது அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் எழுத்தாளர்கள் ஆவர்.இவருடைய பாழி, பிதிரா, த, நீர்வளரி என்ற நான்கு நாவல்களும் மிக அதிக அளவில் மக்களால் கவரப்படவை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
9 மாத விண்வெளி வாழ்க்கை…பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்குமா?
March 17, 2025