பாஜகவோடு ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்தால் அதிமுகவுக்கு லாபம் தான் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கி விட்டோம். அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுக தொண்டர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தால் அதிமுகவுக்கு தான் லாபம். தமிழ்நாட்டில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை உணர்வார்.
அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ஐ வாழ்த்தி தான் நரேந்திர மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி பேசுவதில்லை. வாஜ்பாய் மறுக்கப்படுகிறாரா அல்லது மறந்துவிடுகிறார்களா என தெரியவில்லை. அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பாஜகவை பின்னிலைப்படுத்தி பேசுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!
பிரதமர் மோடி மட்டும் முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். அண்ணாமலை சொந்த கட்சி தலைவர்களையே களங்கப்படுத்துகிறார். இவரது பேச்சை கட்டுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றார். மேலும் கூறியதாவது, 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக, வட மாநிலங்களில் மட்டும் தான் இருந்தது. தென் மாநிலங்களில் பாஜக கட்சியே கிடையாது.
பாஜகவை இங்கே அழைத்து வந்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்படுத்தி பாஜகவை தென் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா தான். எனவே வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்போது பள்ளி மாணவராக இருத்திருப்பார்.
தமிழ்நாட்டுக்கான உரிமையை தராததால் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறினார் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து ராமர் கோவில் குறித்து பேசிய அவர், ராமரை யாராவது ஏமாற்றினால், அவர் சும்மா இருக்கமாட்டார். அதற்குரிய தண்டனையை வழங்குவார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…