மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு

Published by
kavitha

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன இதில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொதுக் கலந்தாய்வு மூலம் நடப்பாண்டு ஆண்டு நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 26ந்தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் நடைபெற்றது.

இதனை அடுத்து தரவரிசைப்பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலை ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்டார். இதில் 1,12,406 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆனது  வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களோடு மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அமைச்சர் கேபி அன்பழகன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியலை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தரவரிசைப்பட்டியலை மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலமாகத் தங்களின் தரவரிசையை அறிந்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள், 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதன் காரணமாக  செப்.17, 25, 28 என்று தரவரிசைப்பட்டியலானது வெளியீடு 3 முறை தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
kavitha

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

10 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

28 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

29 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

40 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago