கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
*சந்தைக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்
*சந்தைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் இல்லை என்றால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் தனிமனித இடைவேளையை பின்பற்றுவது கட்டாயமாகும்.
*உணவு தானிய விற்பனை அங்காடி செப்டம்பர் 18-ல் திறக்கப்படும்.
*மூன்றாம் கட்டமாக, பழம் அங்காடி, மலர் அங்காடி திறக்கப்படும்.
*கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.
*சரக்குகளை இறக்கியபின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வாகனங்கள் அனைத்தும் வெளியேற வேண்டும்.
*கோயம்பேடு அங்காடிகளில் மூன்று, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.
*வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…