147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட
கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக திருமழிசையில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், 147 நாட்களுக்கு பிறகு சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டது. அதன்படி, இரவு 8 மணியில் இருந்து செயல்பட தொடங்குகிறது.
இதில் முதல்கட்டமாக, 194 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாலை 5 மணி முதல் இரவு 9மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்துவருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என கண்காணிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் உடல் பரிசோதனை செய்யவும், ஒவ்வொரு கடையிலும் சானிடைசர் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். மேலும் கடைகள் திறக்கவுள்ளதால், கடைகளுக்கு உரிமையாளர்கள் பூஜை செய்து தங்களின் கடைகளை திறந்தனர்.