#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும்!

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒருநாள் பாதிப்பு 9,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதத்தின் 2 மற்றும் 4-ம் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025