கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், முன்பு படித்த சின்மயா பள்ளியின் ஆசிரியர் வருண் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சில பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் யாரையும் சும்மாவிடக்கூடாது என்று கைப்பட எழுதியிருப்பது அவர் அனுபவித்த வேதனையை சுட்டிக் காட்டுகின்றது.
இதற்கிடையில்,பாலியல் தொல்லை தொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் ஏற்கனவே சொல்லி அழுதுள்ளார்.இது தொடர்பாக,பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர் புகார் அளித்தபோது ஆசிரியரின் மீது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காத நிலையில்,அவர் வேறு பள்ளிக்கு மாறியுள்ளார்.எனினும்,ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்ந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர்,மாணவர்கள்,பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனையடுத்து,மாணவியின் தற்கொலைக்கு காரணமான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கோவை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.அதன்பின்னர்,கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவரின் உடலை பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி,கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,கோவை சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்மீது போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது.மேலும்,அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது.குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…