அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜுக்கு புதிய பொறுப்பு..!
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜை, திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம்.
கடந்த டிசம்பர் மாதம், அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் என குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜை, திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம் செய்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.