மரத்தால் எழுந்த பிரச்சனை! மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சாப்டவேர் என்ஜினியர்!

Default Image
  • கோவை மாவட்டம் கல்லுக்குழி எனும்பகுதியில் வசித்து வந்த சக்திவேல் என்கிற பொறியியலாளர் தன் வீட்டிலேயே எரித்து கொல்லப்பட்டுள்ளார். 
  • போலீஸ் விசாரணையில் எதிர்வீட்டு ஆனந்தகுமார் என்பவர் தனது கூட்டாளிகளுடன் எரித்து கொன்றுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார் சக்திவேல். இவர் சாஃப்ட்வேர் என்ஜினீரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் சில நாட்களாக கால் செய்யவில்லை என கூறி, இவரது தங்கை கணவர் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார்.

வந்து வீட்டை திறந்து பார்த்துள்ளார். பார்த்தவருக்கு  பேரதிர்ச்சி. காரணம் வீட்டினுள் சக்திவேல் எறிந்த நிலையில் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கினர்.

போலீஸ் விசாரணையில், சக்திவேலின் எதிர்வீட்டில் வசித்து வந்துள்ள ஆனந்தகுமார் என்பவருக்கும் சக்திவேலுக்கும் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. சம்பவத்தன்று, சக்திவேலின் வீட்டின் முன்பு இருந்த மரம் வெட்டப்பட்டது தொடர்பாக சக்திவேலுக்கும் ஆனந்தகுமாருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த ஆனந்தகுமார் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து சக்திவேலை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சக்திவேல் இறந்துவிட்டார். உடனே சிரட்டை கரி, மண்ணெண்ணெய் கொண்டு சக்திவேல் உடலை சக்த்திவேல் வீட்டிலேயே எரித்துவிட்டார். இந்த அதிர்ச்சி தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சக்திவேலை கொன்று எரித்த ஆனந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் போலீசார் விசாரணையில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi