கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா ஏன்.? ஆணையர் விளக்கம்.!

Coimbatore Mayor Kalpana Anandkumar

கோவை: மேயர் கல்பனா ஆனந்தகுமார் , உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரின் மேயராக நியமிக்கப்பட்டார். கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்று இருந்த கல்பனா, சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் வெளியாகின.

கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை கோவை ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பினார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று கோவையில் ஒரு நிகழ்வில் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு செல்கையில், மேயர் கல்பனா ராஜினாமா பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் , உடல்நலம் மற்றும் குடும்ப சூழ்நிலை என தனிப்பட்ட கரணங்கள் கூறி ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாகவும், அவரது ராஜினாமா கடிதம் ஏற்பது பற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கோவை ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்