“கோவையில் கொட்டிய கனமழை”மகிழ்ந்த மக்கள்..!!
கோவையில் கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை தொடங்கிய மழை கனமழையாக மாறியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
கோவையில் காந்திபுரம், ரயில்நிலையம், உக்கடம், சுந்தராபுரம், ராமநாதபுரம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான சூலூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரமாக கன மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU