கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்று கிழமை கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களின் சோதனை செய்து 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அடுத்ததாக, அவருக்கு உதவியதாக, முபின் உடன் தொடர்பில் இருந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நெல்லையில், ஏர்வாடி மற்றும் மேலப்பாளையம் பகுதிகளில் இருவர் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தற்போது அதே போல சோதனை திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது .
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே என்ஐஏ நாடு முழுவதும் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…