கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை தின்ற பூனை….!!!
கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அவரை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் இரவு நேரம் என்பதால் வார்டின் தரையிலேயே கிடத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அணுகு சுற்றி திரிந்த பூனை ஒன்று அவரது உடலை கடித்து திண்றுள்ளது.
இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ளவர்கள் அந்த பூனையை துரத்தி விட்டனர். இது தொடர்பாக அங்குள்ள மருத்துவர்களிடம் சொன்னபோது அவர்களை மருத்துவம் பார்ப்பது மட்டும் தான் எங்களது வேலை, இதற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அதுக்குள்ள நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவரது பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் இறந்த உடலை பூனை கடித்து தின்றது அங்குள்ள நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.