திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜயை காண அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதால் விமான நிலைய வளாகமே ஸ்தம்பித்தது.

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மலை 3 மணிக்கு தொடங்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அக்கட்சித் தலைவர் விஜய் கோவை வந்தார்.
கோவை விமான நிலையம் வந்த தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு, அங்கு திரளான தவெக தொண்டர்கள் , ரசிகர்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு விஜய் கோவை வந்துள்ளதால் அவரை நேரில் காண ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால் கோவை விமான நிலைய வளாகம் ஸ்தம்பித்தது.
விமான நிலையம் வந்த விஜய், திறந்தவெளி வாகனத்தில் ஏறி தொண்டர்களை நோக்கி கையசைத்து கொண்டே ரோட் ஷோ சென்றார். அவரை திறந்த வெளி வாகனத்தில் கண்ட தொடர்கள் கட்சித் துண்டுகளை அவரை நோக்கி வீசினர். அதனை பிடித்து தனது தோளில் போட்டபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து அங்கிருந்து புறப்பட்டார் விஜய். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கூட்டத்தை கட்டுப்படுத்த மைக்கில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
திறந்தவெளி வாகனத்தில் சாலை மார்க்கமாக செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு செல்கிறார். அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திறந்தவெளி வாகனத்தில் செல்லும் விஜய் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வேனில் வெளியில் நின்றபடி கையசைத்து செல்வார் எனக் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025