கூடங்குளத்தில் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்…!!!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் டர்பைன் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் 109 நாட்களுக்கு பின் மீண்டும் உற்பத்தி தொடங்கிய நிலையில், மீண்டும் மின்உற்பத்தி நிருதப்பட்டிருப்பதால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.