#NewUpdate:திமுக வுடன் கொ.ம.தே.கட்சி இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது ?
திமுக வுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை.இதில் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.கொ.ம.தே. கட்சி 4 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 3 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இதில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.