எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் திட்டவட்டம்.
சென்னை நடைபெற்ற தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை, ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டு, உறவு இல்லை. இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களாகிய உங்களுக்கு அளிக்கிறேன்.
பழனிசாமி அரசு கவிழக்கூடிய சூழலில் இருந்தது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தராவிட்டால் பழனிசாமி அரசு கவிழ்ந்திருக்கும். ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கவிழ்ந்து விடக்கூடாது என்பதால் ஆதரித்தேன். நான் நினைத்திருந்தால் அப்போதே இபிஎஸ் அரசு முடிந்திருக்கும். பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நான்கரை வருடத்தில் எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்துவிட்டனர்.
கட்சி தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொண்டர்களுக்கு எம்ஜிஆர் வழங்கிய அடிப்படை உரிமையை பறித்துவிட்டனர். எம்ஜிஆர் நமக்கு அளித்த உரிமையை பறிப்பதற்கு இந்த பழனிசாமி யார்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணியா? என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் உணவு தெரிவித்தார்.
மேலும், சசிகலாவை பார்க்க நேரம் கேட்டுள்ளோம். இன்னும் அவர் தரவில்லை, நேரம் தந்தால் பார்ப்போம் என தெரிவித்த ஓபிஎஸ், கொண்டு மண்டலம் மாநாடு உறுதியாக நடைபெறும், விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துவிட்டார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அதுபற்றி கேட்க வேண்டாம் எனவும் ஓபிஎஸ் பதிலளித்தார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…