7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Published by
மணிகண்டன்

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் எனபவருக்கும், சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் கஸ்தூரிக்கும் 8 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கஸ்தூரி 7 மாத காலம் கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் வளைகாப்பு நிகழ்வு நடத்துவதற்காக சுரேஷின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு நேற்று இரவு குடும்பத்தாருடன் புறப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து கொல்லம் எக்பிரஸ் ரயிலில் நேற்று இரவு கஸ்தூரி மற்றும் குடும்பத்தார் புறப்பட்டுள்ளனர்.  அவர்கள், விருத்தாச்சலம் அருகே மாம்பாக்கம் எனும் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் கஸ்தூரி வாந்தி எடுப்பதற்காக ரயில் கதவு அருகே வந்துள்ளார். அப்போது ரயிலில் இருந்து தவ,றி, ஓடிக்கொண்டிருந்த ரயிலின் வெளியே விழுந்துள்ளார்.

உடனடியாக ரயிலில் பயணித்தவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாத காரணத்தால் வேறு பெட்டியில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை 5 கிமீக்கும் அப்பால் நிறுத்தினர். பின்னர் கிழே விழுந்த கஸ்தூரியை சுமார் 2 மணிநேரமாக உறவினர்கள் தேடி கண்டுபிடித்துள்ளனர். படுகாயங்களுடன் இருந்த கஸ்தூரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைகிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 7 மாத கர்பிணியான கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் பிரேத பரிசோதனை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி வயிற்றில் 7 மாத ஆண்குழந்தை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் கஸ்தூரியின் உடல் ஒப்படைக்கப்பட்டது..

இதற்கிடையில், விபத்து நடந்த விவரம் குறித்து விருத்தாசலம் கோட்டாச்சியர் அகமது, உயிரிழந்த கஸ்தூரியின் உறவினர்களிடம் தங்கள் விசாரணையினை தொடர்ந்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

15 minutes ago
வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

46 minutes ago
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

2 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

2 hours ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

3 hours ago

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

3 hours ago