கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஒட்டுது என்று சொல்வார்களாம்-முதலமைச்சர் பழனிச்சாமி
மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், மக்கள் மனதிலிருந்து எம்ஜிஆர் மறையவில்லை. தமிழகத்தில் உயர்க்கல்விக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.
பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர்.
மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர் . காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஒட்டுது என்று சொல்வார்களாம். அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.