கோடநாடு +சிறுதாவூர்க்கு சொந்தமான- 2,000 கோடிச்சொத்துக்களை முடக்கி..ஐடி நோட்டீஸ்
சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோடநாடு எஸ்டேட் பங்களா சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை முடக்கியுள்ள வருமானவரித்துறையினர் அதற்கான நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு 187 இடங்களில் நடைபெற்ற அதிரடி வரிமானவரிச்சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 1800 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன.இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் லதா,கிராம அதிகாரி சத்யா ஆகியோருடன் அங்கு வருகை தந்த வருமான வரித்துறையினர் நோட்டிஸை படித்துக் காட்டி எஸ்டேட் சுவற்றில் ஒட்டி விட்டு சென்றுள்ளனர்.அதே போல சிறுதாவூர் பங்களாவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.மேலும் உயர் நீதிமன்றத்தால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று
அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா,ஜெ.தீபக் ஆகியோருக்கும் நோட்டீஸ் வழங்கக்கப் பட்டுள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.