கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
அதே சமயம், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு,கோடநாடு வழக்கு தொடர்பாக 220 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில்,அறிக்கை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர் ஆறுமுக சாமி; அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தவராகவும் கூறப்படுகிறது.
நேற்று விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்றும் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…