கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சூடுப்பிடிக்க ஆரம்பித்தது.
இதனிடையே, இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக, உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து வந்தார்.
இதையும் படிங்களே! இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிப்பு – ஐகோர்ட் உத்தரவு
கோடநாடு சம்பவத்துடன் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வந்தார். சிபிசிஐடி தன்னை விசாரணைக்கு அழைக்கும்போது தனது சகோதரர் கனகராஜ் கூறிய அனைத்து உண்மைகளையும் [தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் தனபாலுக்கு சம்மன் அனுப்பினர். கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபால் நேரில் ஆஜராகுமாரும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, கடந்த முறை விசாரணைக்கு தனபால் ஆஜரானார். இதற்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு சம்பவத்தில் 50 பேருக்கு தொடர்பு உள்ளது. கனகராஜ் கொலை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல் அதிகாரிகளின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளேன் என்றும் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் எனவும் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்று மீண்டும் கோடநாடு வழக்கு தொடர்பாக கனகராஜ் சகோதரர் தனபால் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. கோடநாடு வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபாலிடம் விசாரணை நடந்தது. தனபாலிடம் காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் மாலை 4 மணியுடன் விசாரணை நிறைவடைந்தது.
சகோதரர் கனகராஜ் மரணம், அதற்கு முன் நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தியதாக தனபால் கூறியுள்ளார். சிபிசிஐடி விசாரணை நிறைவாக உள்ளது, மீண்டும் ஆஜராக சம்மன் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், இந்த விசாரணையில் தனபால் பல்வேறு தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இதையடுத்து கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல்துறை தீவிரப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…