கொடநாடு சம்பவம்: உரிய விசாரணை நடைபெற்று வருகிறது -முதலமைச்சர் பழனிசாமி
கொடநாடு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், கொடநாடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததற்கு காரணம் திமுக தான்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது கிராமங்களுக்கு செல்லாதது ஏன்? வேண்டும் மக்களின் அடிப்படை வசதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திமுகவின் கிராம சபை கூட்டம் ஒரு அரசியல் நாடகம். ஸ்டாலினால் குறுக்கு வழியில் அரசை கவிழ்க்க முடியாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.