கோடநாடு வழக்கு: விசாரணைக்காக நாளை ஆஜராகும் சயான்..!

Published by
murugan

கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

கோடநாடு வழக்கு – குஜராத் தடயவியல் குழு தமிழகம் வருகை!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்காக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் நாளை ஆஜராக உள்ளார். தன்னிடம் சில ஆவணங்கள் உள்ளதாக சயான் கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

9 minutes ago

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

30 minutes ago

வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…

31 minutes ago

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

2 hours ago

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…

3 hours ago

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

11 hours ago