கொடநாடு வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கோவையை சேர்ந்த பேக்கரி மேலாளர் சயான், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். கொடநாட்டில் கொள்ளையடிக்கும் போது அங்கு இரவு காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ், வாலையாறு மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்னர், சயான் உள்ளிட்ட 10 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கானது 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வரும் வருகிறது. இதற்கிடையில், கடந்த 13-ம் தேதி கோத்தகிரி போலிசார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சாயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை சயான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், உதகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு இன்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நடைபெறும் விசாரணைக்காக, வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு உதகை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…