கோடநாடு வழக்கு – இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்!
கோடநாடு வழக்கில் உதகை நீதிமன்றத்தில் இன்று இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை விவரங்களை இன்று சமர்பிக்கிறது சிபிசிஐடி. உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை வழக்கு விசாரணையின்போது இதுவரை நடந்த விசாரணை விவரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆய்வில் சேகரிக்கப்பட்ட 6 வகையான பொருட்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை முந்தைய விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கடந்த முறை நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று கோடநாடு வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் கோடநாடு வழக்கு விசாரணை இன்று மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வர உள்ளது. அப்போது, சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.