kodanadu case - Gujarat Forensic Team [file image]
கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது.
இதனிடையே, கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கும் எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழக்கில் சாட்சிய பதிவிற்கு இபிஎஸ் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.
கோவாவில் கொலை… 4 வயது மகனின் உடலுடன் பெங்களூருக்கு தப்பிய பெண் CEO.!
ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு, தனது வீட்டில் இருந்தே சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் கோரி இபிஎஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, கார்த்திகேயன் பாலன் என்பவரை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து சாட்சி பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்திருந்தார்.
அப்போது, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய குஜராத் தடயவியல் குழு தமிழகம் வருகிறது.
அதாவது கோடநாடு வழக்கிற்காக குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழக குழு வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறது என்றும் சம்பவம் நடந்த 2017ல் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கைப்பற்றிய கேசட்டில் உள்ள தகவல்களை தர கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 19 டவர்களில் பதிவான 60 செல்போன் எண்களின் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…