கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி டெல்லியை சார்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் என்பவர் தொடர்ந்து பேசு வருகிறார். இந்த வழக்கில் இருந்து தன்னை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சையான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் வழக்கில் சாட்சிய பதிவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக வேண்டிய நிலையில் இருந்தது. அப்போது, நீதிமன்றத்தில் தன் ஆஜராக பட்சத்தில் வழக்கறிஞர்களுக்கும், உயர்நீதிமன்றத்தில் உள்ள பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் என்பதால் தனது வீட்டில் சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு தர வேண்டாம்.. திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்.!
அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கறிஞர் கார்த்திகேயன் பாலன் என்பவரை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து சாட்சி பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று பட்டியலிடப்படாத நிலையில், இன்று பட்டியலிடப்பட்டது, இருப்பினும் எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் அவதூறு கருத்துக்களை நீக்க கோரி தனது தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு நிலுவையில் இருப்பதால் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றிவைக்க வேண்டு என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…