கோடநாடு வழக்கு – விரைந்து முடிக்க சிபிசிஐடி திட்டம்!
கோடநாடு கொள்ளை, கொலை வலாக்கின் விசாரணையை விரைந்து முடிக்க சிபிசிஐடி திட்டம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளார். நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
230 பேரிடம் விசாரணை:
கோடநாடு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு விசாரித்து வருகிறது சிபிசிஐடி. கடந்த 2017ம் ஆண்டில் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, காவலாளி கொலை வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு கோடநாடு வழக்கு சூடுபிடித்தது. இவ்வழக்கை பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது.
விரைந்து முடிக்க திட்டம்:
இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர், 230க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. அதன்படி, தினமும் 2 முதல் 3 நபர்களை விசாரித்து வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.