கோடநாடு வழக்கு – அதிமுக நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை!
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை தீவரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. இதனால் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுபக்கம் கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர வியாபாரியான சஜீவன், கோடநாடு பங்களாவில் உள் அரங்க வேலைப்பாடுகளை செய்தவர். இந்த வழக்கில் ஆரம்ப முதலே சஜீவன் மீது குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. முன்னதாக சசிகலா, ஆறுக்குட்டி ஆகியோரிடம் நடந்திருந்தது தனிப்படை போலீஸ். இந்த வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறை கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.