கோடநாடு வழக்கு – 3,600 பக்க அறிக்கை ஒப்படைப்பு!
கோடநாடு வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைப்பு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. 316 பேரிடம் பெற்ற வாக்கு மூலங்கள் அடங்கிய 3,600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றம், சிபிசிஐடி போலீசிடம் தனிப்படை போலீஸ் அளித்த 3,600 பக்க விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையின்போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவின் பதில்கள் 30 பக்கமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.