கோடநாடு விவகாரம்:இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம் – மு.க.ஸ்டாலின்
கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 2006-ஆம் ஆண்டு 4 ஊராட்சி மக்களிடம் சுமுகமாக பேசி உள்ளாட்சி தேர்தலை நடத்தியது திமுகதான்.கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? என்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் முறையிட உள்ளோம்.
ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என பத்திரிகையாளர் மேத்யூ கூறியுள்ளார். இதைவிட அசிங்கம் தமிழகத்திற்கு எதுவும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.